சேலம் அழகாபுரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகன் தற்கொலை பெற்றோர்–உறவினர்கள் கதறல்


சேலம் அழகாபுரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகன் தற்கொலை பெற்றோர்–உறவினர்கள் கதறல்
x
தினத்தந்தி 1 Jan 2017 4:45 AM IST (Updated: 31 Dec 2016 8:23 PM IST)
t-max-icont-min-icon

சேலம் அழகாபுரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் அதிகாரி மகன் சேலம் அழகாபுரம் நியூ பேர்லேண்ட்ஸ் எம்.ஜி.ரோடு பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவர், வேலூர் மாவட்டம் காட்ப

சேலம்,

சேலம் அழகாபுரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் அதிகாரி மகன்

சேலம் அழகாபுரம் நியூ பேர்லேண்ட்ஸ் எம்.ஜி.ரோடு பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவர், வேலூர் மாவட்டம் காட்பாடி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சத்தியபிரியா. இவர்களது மகன் சசிதரன் (வயது 26). பி.எஸ்சி. வரை படித்துள்ள இவர், குரங்குசாவடி பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். சசிதரனின் சகோதரி பிரீத்தி (21). இவர் சேலத்தில் ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு சசிதரன், வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு தூங்க செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றார்.

நேற்று காலையில் அவரது தாய் சத்தியபிரியா அங்கு சென்று பார்த்தபோது, சசிதரன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். சசிதரன் நள்ளிரவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இது பற்றி அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட சசிதரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், சசிதரன் வயிற்று வலியின் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மனவேதனையில் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

காதல் பிரச்சினையா?

தற்கொலை செய்து கொண்ட சசிதரன், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சசிதரன் ஏற்கனவே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது உயிர் பிழைத்த அவர் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில் சசிதரன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றிய விவரம் காட்பாடியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் அவரது தந்தை முரளிதரனுக்கு தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சேலத்திற்கு காரில் விரைந்து வந்தார். பின்னர், ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும், உறவினர்களும் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து சசிதரனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story