விக்கிரவாண்டியில் அரசு பஸ்கள் மோதல்; 10 பேர் காயம்
விக்கிரவாண்டியில் அரசு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். அரசு பஸ்கள் மோதல் சென்னையில் இருந்து 25–க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு கும்பகோணத்திற்கு புறப்பட்டது. பஸ்சை கும்பகோணத்தை சேர்ந்த டிரைவர் மன
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டியில் அரசு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
அரசு பஸ்கள் மோதல்சென்னையில் இருந்து 25–க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு கும்பகோணத்திற்கு புறப்பட்டது. பஸ்சை கும்பகோணத்தை சேர்ந்த டிரைவர் மனோகரன் ஓட்டிச்சென்றார். கண்டக்டராக கருணாகரன் இருந்தார்.
இந்த பஸ் நேற்று அதிகாலை 5 மணியளவில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரி டிரைவர் திடீரென ‘பிரேக்’ போட்டார். இதை சற்றும் எதிர்பாராத அரசு விரைவு பஸ் டிரைவர் மனோகரன், லாரி மீது மோதாமல் இருக்க ‘பிரேக்’ போட்டபோது அந்த சமயத்தில் பின்னால் சென்னையில் இருந்து விருத்தாசலம் நோக்கிச்சென்ற அரசு பஸ், அரசு விரைவு பஸ்சின் பின்புறம் மோதியது. இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி சேதமடைந்தது.
10 பேர் காயம்இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவரான விருத்தாசலத்தை சேர்ந்த வீரபாண்டியன் (வயது 29), கண்டக்டர் அண்ணாத்துரை (40) மற்றும் 2 பஸ்களிலும் இருந்த பயணிகளான சாத்தான்குளத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (40), விழுப்புரம் கோனூரை சேர்ந்த சண்முகம் (40), சென்னை ராயப்பேட்டை ஜெயலட்சுமி (45), புஷ்பராஜ் (24), கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே புத்தூரை சேர்ந்த ஆரோக்கியகோபி (28), விருத்தாசலம் பகுதியை சேர்ந்த கஸ்தூரி (48), பிரேம்குமார் (27), காட்டுமன்னார்குடி அமிர்தலிங்கம் (42) ஆகியோர் காயமடைந்தனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.