மயிலாடுதுறை அருகே விபத்து: வாய்க்காலில் அரசு பஸ் கவிழ்ந்தது டிரைவர் உள்பட 15 பேர் படுகாயம்


மயிலாடுதுறை அருகே விபத்து: வாய்க்காலில் அரசு பஸ் கவிழ்ந்தது டிரைவர் உள்பட 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 31 Dec 2016 6:15 PM GMT (Updated: 2016-12-31T23:45:28+05:30)

மயிலாடுதுறை அருகே வாய்க்காலில் அரசு பஸ் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். அரசு பஸ் கவிழ்ந்தது நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து நேற்று காலை ஒரு அரசு பஸ் நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் மணிவண்ணன் என்ப

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே வாய்க்காலில் அரசு பஸ் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரசு பஸ் கவிழ்ந்தது

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து நேற்று காலை ஒரு அரசு பஸ் நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் மணிவண்ணன் என்பவர் ஓட்டினார். மங்கைநல்லூர் அருகே மலைக்குடி கிராமத்தில் உள்ள குறுகிய பாதையில் சென்றபோது எதிரே வந்த வேனுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் மணிவண்ணன் பஸ்சை சாலையோரம் திருப்பியபோது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் திடீரென அந்த பகுதியில் உள்ள எடக்குடி பாசன வாய்க்காலில் கவிழ்ந்தது.

15 பேர் படுகாயம்

இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் மணிவண்ணன், பயணிகள் ராஜேந்திரன், குமரேசன், மகாலிங்கம், காளிமுத்து, சுப்புலட்சுமி உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வாய்க்காலில் கவிழ்ந்த அரசு பஸ் முற்றிலும் சேதம் அடைந்தது. இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story