ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண்ணுடன் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் கலெக்டர் அறிவிப்பு


ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண்ணுடன் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Jan 2017 4:30 AM IST (Updated: 1 Jan 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி, ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண்ணுடன் தங்கள் வாழ்நாள் சான்றிதழை கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் சங்கர் அறிவித்து உள்ளார். ஓய்வூதியதாரர்கள் கோவையில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் மூலம் 1 லட்சத்

ஊட்டி,

ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண்ணுடன் தங்கள் வாழ்நாள் சான்றிதழை கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் சங்கர் அறிவித்து உள்ளார்.

ஓய்வூதியதாரர்கள்

கோவையில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் மூலம் 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். அவர்கள் அனைவரும் வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதிக்குள் ஆதார் எண் மற்றும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்தந்த கருவூலம், சார்நிலை கருவூலகங்களில் ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று ஆதார் எண், ஓய்வு பெறும் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து பதிவு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் கூறியதாவது:-

இ-சேவை மையம்

நீலகிரி மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்களில் மாத ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் ஓய்வூதிய அடையாள எண் மூலம் வருடாந்திர நேர்காணலுக்குமின்னணு உயிர்வாழ் சான்றிதழ் பதிவு செய்யும் பணி கடந்த நவம்பர் மாதம் 24-ந்தேதி முதல் இ-சேவை மையங்களில் நடைபெற்று வருகிறது.

ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஆதார் எண், வங்கி கணக்கு எண், நிரந்தர கணக்கு எண், மற்றும் ஓய்வூதிய அடையாள அட்டை எண் ஆகியவற்றை கொண்டு இ-சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும்.

அங்கு சென்று பதிவு செய்து மின்னணு உயிர்வாழ் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு சேவை கட்டண மாக ரூ.10 வசூலிக்கப்படு கிறது.
மேலும் ஆதார் எண்ணை கருவூலங்களில் இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக மாவட்ட சார்நிலை கருவூலங்களில் அதனை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story