பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம கணக்காளர் கைது ஊழல் தடுப்பு படையினர் அதிரடி நடவடிக்கை
பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம கணக்காளரை ஊழல் தடுப்பு படையினர் கைது செய்து உள்ளனர். ரூ. 7 ஆயிரம் லஞ்சம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா சுண்டிகொப்பா கிராமத்தை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபிரசாத். இவர் சுண
குடகு,
பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம கணக்காளரை ஊழல் தடுப்பு படையினர் கைது செய்து உள்ளனர்.
ரூ. 7 ஆயிரம் லஞ்சம்குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா சுண்டிகொப்பா கிராமத்தை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபிரசாத். இவர் சுண்டிகொப்பா கிராம கணக்காளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி உதய் என்பவர், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவருக்கு பட்டாவில் பெயர் மாற்றம் செய்து கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் உதய், கிராம கணக்காளர் சந்திரபிரசாத்தை சந்தித்து பட்டாவில் பெயர் மாற்றம் செய்து கொடுப்பது பற்றி கேட்டு உள்ளார். அப்போது சந்திரபிரசாத், உதயிடம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தர வேண்டும் என்றால் எனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. அதற்கு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும், ரூ.7 ஆயிரம் தருவதாகவும் கூறி உள்ளார். இதற்கு சந்திரபிரசாத்தும் சம்மதித்தாக தெரிகிறது.
கைதுஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத உதய், இதுகுறித்து ஊழல் தடுப்பு படையில் புகார் செய்தார். இதையடுத்து உதய்க்கு சில அறிவுரைகளை வழங்கிய ஊழல் தடுப்பு படையினர், அவரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.7 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சந்திரபிரசாத்தை சந்தித்த, உதய் அவரிடம் பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை சந்திரபிரகாஷ் வாங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படையினர் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து ஊழல் தடுப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து கைதான சந்திரபிரசாத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.