ஹலகூர் அருகே லிங்கப்பட்டணாவில் 2 தோட்டங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் 75 வாழை, 25 தென்னை மரங்கள் நாசம்
ஹலகூர் அருகே லிங்கப்பட்டணாவில் 2 தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதில் 75 வாழை மரங்கள், 25 தென்னை மரங்கள் நாசமானது. காட்டு யானைகள் அட்டகாசம் மண்டியா மாவட்டம் ஹலகூர் அருகே உள்ளது, லிங்கப்பட்டணா கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியை ஒட
ஹலகூர்,
ஹலகூர் அருகே லிங்கப்பட்டணாவில் 2 தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதில் 75 வாழை மரங்கள், 25 தென்னை மரங்கள் நாசமானது.
காட்டு யானைகள் அட்டகாசம்மண்டியா மாவட்டம் ஹலகூர் அருகே உள்ளது, லிங்கப்பட்டணா கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் அடிக்கடி காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து அடிக்கடி அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் லிங்கபட்டணா கிராமத்திற்குள் புகுந்தன. அந்த யானைகள் அதே கிராமத்தை சேர்ந்த போரேகவுடா என்பவரின் வாழைத்தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு அறுவடைக்கு தயாராக இருந்த குலையுடன் கூடிய வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. இதில் மொத்தம் 75 வாழை மரங்கள் சேதமானது. மேலும் அங்கு போடப்பட்டு இருந்த தண்ணீர் குழாய்களையும் மிதித்து காட்டு யானைகள் நாசப்படுத்தின.
25 தென்னை மரங்கள் சேதம்இதைதொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட காட்டு யானைகள், ஒன்னப்ப பாகவதர் என்பவரது தென்னைமரத் தோட்டத்திற்குள் நுழைந்து, அங்கு சாகுபடி செய்திருந்த தென்னை மரக்கன்றுகளை தின்று நாசம் செய்தன. மொத்தம் 25 தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியது.
இதுகுறித்து விவசாயிகள் போரேகவுடா, ஒன்னப்ப பாகவதர் ஆகியோர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் பாதிக்கப்பட்ட 2 தோட்டங்களை பார்வையிட்டனர். மேலும் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். அப்போது விவசாயிகள், எங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகள் கவலைஇந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வனத்துறையினர், காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் உறுதி அளித்தனர். இருப்பினும் தொடர்ந்து காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.