காந்திவிலி ஆஸ்பத்திரியில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை நேபாளத்தை சேர்ந்தவர்
காந்திவிலியில் தனியார் ஆஸ்பத்திரியில் நேபாள நாட்டை சேர்ந்த நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நர்சு நேபாள நாட்டை சேர்ந்தவர் தீபன். இவரது மனைவி ஆஷா(வயது24). இந்த தம்பதி 6 ஆண்டுகளுக்கு முன் நேபாளத்தில் இருந்து மும்பை வந்தனர். இருவரும் மலாடு ம
மும்பை,
காந்திவிலியில் தனியார் ஆஸ்பத்திரியில் நேபாள நாட்டை சேர்ந்த நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நர்சுநேபாள நாட்டை சேர்ந்தவர் தீபன். இவரது மனைவி ஆஷா(வயது24). இந்த தம்பதி 6 ஆண்டுகளுக்கு முன் நேபாளத்தில் இருந்து மும்பை வந்தனர். இருவரும் மலாடு மேற்கில் உள்ள குடிசை பகுதியில் வசித்து வந்தனர்.
தீபன் காந்திவிலியில் உள்ள ஒரு மருந்து கடையில் உதவியாளராகவும், ஆஷா தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாகவும் பணிபுரிந்து வந்தனர்.
இந்த தம்பதிக்கு பிறந்த 2 குழந்தைகள் நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டனர். இதன் பின்னர் அண்மையில் ஆஷா மீண்டும் கர்ப்பம் ஆனார். இந்தநிலையில் திடீரென அவரது கர்ப்பம் கலைந்து விட்டதாக தெரிகிறது. இது ஆஷாவுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்கொலைஇந்தநிலையில், நேற்றுமுன்தினம் ஆஸ்பத்திரிக்கு பணிக்கு வந்த ஆஷா திடீரென மருத்துவமனையில் உள்ள அறைக்குள் சென்று, தனது துப்பாட்டாவை கழுத்தில் மாட்டி உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதை பார்த்து மருத்துவனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த காந்திவிலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆஸ்பத்திரியில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.