சஞ்சய்காந்தி தேசிய பூங்காவில் பஸ் கவிழ்ந்து 12 சுற்றுலா பயணிகள் காயம்
சஞ்சய்காந்தி தேசிய பூங்காவில் பஸ் கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் 12 பேர் காயம் அடைந்தனர். சுற்றுலா பயணிகள் பஸ் மும்பை போரிவிலியில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்கா பரந்து விரிந்து காணப்படும் வனப்பகுதி ஆகும். இங்கு சிறுத்தைப்புலி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவில
மும்பை,
சஞ்சய்காந்தி தேசிய பூங்காவில் பஸ் கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் 12 பேர் காயம் அடைந்தனர்.
சுற்றுலா பயணிகள் பஸ்மும்பை போரிவிலியில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்கா பரந்து விரிந்து காணப்படும் வனப்பகுதி ஆகும். இங்கு சிறுத்தைப்புலி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. சஞ்சய் காந்தி தேசிய பூங்கா சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.
இதன் காரணமாக தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் வன அழகை சுற்றிப்பார்த்து ரசிப்பதற்காக ‘சபாரி கியூன்’ என்ற பெயரில் பஸ் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று காலை 11 மணியளவில் ஒரு ‘சபாரி கியூன்’ பஸ் 31 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பஸ் கானேஹரி குகைக்கு செல்லும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பஸ்சின் கியர் சிக்கியதால் டிரைவர் திணறினார்.
12 பேர் காயம்இதனால் பஸ் தானாகவே பின்பக்கமாக வேகமாக வந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக அங்குள்ள ஒரு மரம் பஸ்சை தடுத்து கொண்டது. இல்லையெனில் பஸ் அங்குள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து இருக்கும்.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 12 சுற்றுலா பயணிகள் காயம் அடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினார்கள். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய பஸ் கிரேன் மூலம் தூக்கி நிலைநிறுத்தப்பட்டது.
இந்த விபத்து குறித்து போரிவிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.