மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை முதல்–மந்திரி இறுதி செய்வார் ஆசிஷ் செலார் பேட்டி


மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை முதல்–மந்திரி இறுதி செய்வார் ஆசிஷ் செலார் பேட்டி
x
தினத்தந்தி 1 Jan 2017 3:18 AM IST (Updated: 1 Jan 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இறுதி செய்வார் என பா.ஜனதா மும்பை பிரிவு தலைவர் ஆசிஷ் செலார் தெரிவித்துள்ளார். மாநகராட்சி தேர்தல் நாட்டின் நிதி தலைநகரமான மும்பை மாநகராட்சி தற்போது சிவசேனா

மும்பை,

மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இறுதி செய்வார் என பா.ஜனதா மும்பை பிரிவு தலைவர் ஆசிஷ் செலார் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி தேர்தல்

நாட்டின் நிதி தலைநகரமான மும்பை மாநகராட்சி தற்போது சிவசேனா வசம் உள்ளது. இதன் ஆட்சிகாலம் முடிவதால், மாநகராட்சி தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. முக்கிய கூட்டணி கட்சிகலான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

இதேபோல் கடந்த 20 ஆண்டுகளாக கூட்டணியாக மாநகராட்சி தேர்தலை சந்தித்து வந்த பா.ஜனதா, சிவசேனா கட்சிகளிடேயே தற்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் இந்த தேர்தலில் அவர்களின் கூட்டணி உடைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் கூட்டணி அமையவேண்டும் எனில் மொத்தம் உள்ள 227 தொகுதிகளில் 110 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என சிவசேனாவிடம், பா.ஜனதா நிபந்தனை வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

போட்டியிட தயார்

இந்த நிலையில் சிவசேனா மந்திரி சுபாஸ் தேசாய் இதுகுறித்து கூறுகையில், ‘‘ கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தொகுதி ஒதுக்கீடு பிரச்சினை காரணமாக கடைசி நேரத்தில் பா.ஜனதா கூட்டணியை விட்டு விலகியது. இந்த முடிவு எங்கள் கட்சிக்கு பாடம் புகட்டியுள்ளது. இந்த முறை 227 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ளோம். அதற்கான முன் ஏற்பாடுகளை செய்துள்ளோம் ’’ என்றார்.

இதேபோல் பா.ஜனதா மும்பை பிரிவு தலைவர் ஆசிஷ் செலார் கூறியிருப்பதாவது:–

மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கவனத்துடன் தேர்வு செய்து வருகிறார். இதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அவரே இறுதி செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இருப்பினும் கூட்டணி கூறித்த கேள்விகளுக்கு அவர் பதில் கூற மறுத்து விட்டார்.


Next Story