குப்பை கொட்டியதால் தகராறு: திருச்சியில், காவலர் குடியிருப்பில் பெண் போலீசார் கட்டிபுரண்டு சண்டை
திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு பிளாக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் சுமதி, ராஜேஸ்வரி ஆகியோர் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்
திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு பிளாக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் சுமதி, ராஜேஸ்வரி ஆகியோர் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேஸ்வரி வீட்டின் அருகே சுமதி குப்பையை கொட்டினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஸ்வரி தட்டி கேட்டார். அபபோது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தகராறு முற்றியதில் ஒருவருக்கொருவர் கட்டிபுரண்டு சண்டை போட்டனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் விலக்கி விட்டனர். பின்னர் இது குறித்து ராஜேஸ்வரி மற்றும் சுமதி ஆகியோர் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி இரு தரப்பினரையும் அழைத்து அறிவுரை கூறி அனுப்பினார். இதையடுத்து இருவரும் சமாதானம் அடைந்து சென்றனர். இந்த சம்பவம் காவலர் குடியிருப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது.