திருக்கழுக்குன்றம் அருகே அழகுசமுத்திரம் மலைக்குன்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் போலீசார் குவிப்பு


திருக்கழுக்குன்றம் அருகே அழகுசமுத்திரம் மலைக்குன்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 31 Dec 2016 11:48 PM GMT (Updated: 31 Dec 2016 11:48 PM GMT)

திருக்கழுக்குன்றம் அருகே அழகுசமுத்திரம் மலைக்குன்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட அழகுசமுத்திரம் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் அந்த பகுதியைச் சேர்ந்த இந்துக்கள் விழாக்காலங்களில்

திருக்கழுக்குன்றம்,

திருக்கழுக்குன்றம் அருகே அழகுசமுத்திரம் மலைக்குன்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட அழகுசமுத்திரம் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் அந்த பகுதியைச் சேர்ந்த இந்துக்கள் விழாக்காலங்களில் பாரிவேட்டை நடத்தி பெருமாள் நாமத்தை வரைந்து வழிபட்டு வருவது வழக்கத்திலுள்ளது. இந்த நிலையில் இந்த பகுதியிலுள்ள பரிவட்டகுன்று என்று அழைக்கப்படும் குன்றின் ஒரு பகுதியில் அழகுசமுத்திரம் ஊராட்சிக்கு அருகிலுள்ள சோகண்டி ஊராட்சிக்குட்பட்ட மாதாகோவில் தெரு பகுதியை சேர்ந்த சிலர் சில ஆண்டுகளாக சிலுவை மற்றும் சிலைகள் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 350 ஏக்கர் பரப்பரளவுடைய இந்த மலைக்குன்றில் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரங்கள் வளர்க்கப்பட்டு வரும் பகுதியில் இயற்கை வளங்கள் சிதைக்கப்பட்டு மலைப்பகுதியில் மேலும் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஆங்காங்கே புதிதாக சிலுவைகள் மற்றும் சிலைகள் வைத்து மலைக்குன்றை ஆக்கிரமிப்பு செய்தனர்.

அகற்றம்

இதனை அகற்றக்கோரி அழகுசமுத்திரம் கிராம மக்கள் வருவாய்த்துறையினருக்கு அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த மாதம் 26–ந் தேதி தாசில்தாரின் ஜீப்பை பொதுமக்கள் சிறைபிடித்தனர். தொடர்ந்து தாசில்தார், ஆர்.டி.ஓ. அலுவலகங்களை முற்றுகையிட்டும் சாலை மறியல் செய்தும் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை வைத்தனர். இதையடுத்து திருக்கழுக்குன்றம் தாசில்தார் சீதா, செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. மற்றும் கலெக்டருக்கு ஆக்கிரமிப்பை அகற்ற பரிந்துரை செய்தார். ஆக்கிரமிப்பை அகற்ற காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி உத்தரவிட்டதையடுத்து நேற்று காலை திருக்கழுக்குன்றம் தாசில்தார் சீதா தலைமையில் வருவாய்த்துறையினர் அழகுசமுத்திரம் ஊராட்சியில் உள்ள மலைக்குன்றில் 10 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து அங்கு வைத்திருந்த சிலைகள் மற்றும் சிலுவைகளை அகற்றினர்.

அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 450–க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.


Next Story