கைகளை துணியால் கட்டிக் கொண்டு இந்து இளைஞர் எழுச்சி பேரவையினர் ஆர்ப்பாட்டம் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தல்

கைகளை துணியால் கட்டிக் கொண்டு இந்து இளைஞர் எழுச்சி பேரவையினர் ஆர்ப்பாட்டம் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-05T02:24:44+05:30)

கைகளை துணியால் கட்டிக் கொண்டு இந்து இளைஞர் எழுச்சி பேரவையினர் ஆர்ப்பாட்டம் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தல்

தஞ்சாவூர்,

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி இந்து இளைஞர் எழுச்சி பேரவை சார்பில் தஞ்சை ரெயிலடியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செல்வசரவணன், சிவசேனா கட்சி மாநில துணைத் தலைவர் புலவஞ்சி போஸ், மாவட்ட தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்றவர்கள் தங்களது கைகளை துணியால் கட்டிக் கொண்டு ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story