ஜெயலலிதா 30–வது நாள் நினைவு தினம்: கிருஷ்ணகிரியில், அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம்


ஜெயலலிதா 30–வது நாள் நினைவு தினம்: கிருஷ்ணகிரியில், அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம்
x
தினத்தந்தி 5 Jan 2017 11:00 PM GMT (Updated: 5 Jan 2017 3:11 PM GMT)

ஜெயலலிதா மறைந்து ஒரு மாதம் நிறைவடைந்ததையொட்டி கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. மேலும் ஜெயலலிதா படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஜெயலலிதா மரணம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற

கிருஷ்ணகிரி,

ஜெயலலிதா மறைந்து ஒரு மாதம் நிறைவடைந்ததையொட்டி கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. மேலும் ஜெயலலிதா படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ஜெயலலிதா மரணம்

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் (டிசம்பர்) 5–ந் தேதி மரணம் அடைந்தார். அவர் இறந்து நேற்றுடன் 30–வது நாள் நிறைவடைந்ததையொட்டி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரியில் மவுன ஊர்வல நிகழ்ச்சி மற்றும் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, அசோக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மவுன ஊர்வலம்

நிகழ்ச்சியை முன்னிட்டு ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் மவுன ஊர்வலமும் நடந்தது. கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் அருகில் தொடங்கிய ஊர்வலம், முக்கிய சாலைகளில் சென்று மீண்டும் 5 ரோடு ரவுண்டானாவை அடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் தென்னரசு, நகர அ.தி.மு.க. செயலாளர்கள் கேசவன் (கிருஷ்ணகிரி), எஸ்.நாராயணன் (ஓசூர்), முன்னாள் எம்.பி. பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், முனியப்பன், ஜெயபாலன், பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. முனிவெங்கடப்பன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் மாதேவா, கிருஷ்ணகிரி முன்னாள் நகராட்சி தலைவர் தங்கமுத்து, அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஷாகுல் அமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளியில் காந்தி சிலை முன்பு அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் முனியப்பன், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், கட்சி நிர்வாகிகள் ராமு, எல்லப்பன், பசவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story