கடலூரில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


கடலூரில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2017 11:00 PM GMT (Updated: 5 Jan 2017 4:01 PM GMT)

மத்திய அரசை கண்டித்து கடலூரில், காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கண்டன ஆர்ப்பாட்டம் புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் கடலூர் தலைமை

கடலூர்,

மத்திய அரசை கண்டித்து கடலூரில், காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் சீதாராமன், ராமச்சந்திரன், சிவா, திலகர், முருகன், குள்ளப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார்.

விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் மணிரத்தினம், வக்கீல் சந்திரசேகரன், என்.ஜி.ஓ. சங்க முன்னாள் தலைவர் சூரியமூர்த்தி, மேலிட பார்வையாளர்கள் புதுச்சேரி காங்கிரஸ் பொதுச்செயலாளர் சங்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜாபாபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சாந்திராஜ், பொருளாளர் ராஜன், மாவட்ட செயலாளர்கள் கிஷோர்குமார், காமராஜ், மார்க்கெட் மணி, தண்டபாணி, சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் காங்கிரஸ் ராஜேஷ் நன்றி கூறினார்.


Next Story