காட்பாடி பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 21 ஆயிரத்து 646 வழக்குகள் பதிவு ரூ.30¾ லட்சம் அபராதம் வசூல்


காட்பாடி பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 21 ஆயிரத்து 646 வழக்குகள் பதிவு ரூ.30¾ லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 5 Jan 2017 10:30 PM GMT (Updated: 5 Jan 2017 4:37 PM GMT)

காட்பாடி பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரு ஆண்டில் 21 ஆயிரத்து 646 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து 30 லட்சத்து 70 ஆயிரத்து 900 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல் காட்பாடி போக்குவரத்துப் போலீஸ்

காட்பாடி,

காட்பாடி பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரு ஆண்டில் 21 ஆயிரத்து 646 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து 30 லட்சத்து 70 ஆயிரத்து 900 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்

காட்பாடி போக்குவரத்துப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்–இன்ஸ்பெக்டர் நவீன்யுவராஜ் மற்றும் போலீசார் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் 31–ந்தேதி வரை காட்பாடி பகுதியில் விருதம்பட்டு, சித்தூர் பஸ் நிறுத்தம், பழைய காட்பாடி, ரெயில் நிலைய சந்திப்பு, வள்ளிமலை கூட்ரோடு உள்பட பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கை செய்தனர்.

அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக பாரம், அதி வேகமாக வாகனம் ஓட்டுதல், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல், ‘ஹெல்மெட்’ அணியாமல் வாகனம் ஓட்டுதல் உள்பட பல்வேறு விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

21,646 வழக்குகள்

அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 369 வழக்குகள், அதிக பாரம் ஏற்றியதாக 611 வழக்குகள், அதிக உயரத்தில் பொருட்களை கொண்டு சென்றதாக 1,328 வழக்குகள், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 377 வழக்குகள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியதாக 527 வழக்குகள், ‘ஹெல்மெட்’ அணியாமல் வாகனம் ஓட்டியதாக 3,362 வழக்குகள், மற்றும் பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 14,594 வழக்குகள் என மொத்தம் 21 ஆயிரத்து 646 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிகளை மீறியவர்களிடம் இருந்து கடந்த ஒரு ஆண்டில் அபராதமாக 30 லட்சத்து 70 ஆயிரத்து 900 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.

மேற்கண்ட தகவலை காட்பாடி போக்குவரத்துப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


Next Story