திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் பச்சை மிளகாய் கிடு, கிடு விலை உயர்வு


திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் பச்சை மிளகாய் கிடு, கிடு விலை உயர்வு
x
தினத்தந்தி 5 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-05T22:50:08+05:30)

திண்டுக்கல் மாவட்டத்தில் 2–வது பெரிய மார்க்கெட்டாக திண்டுக்கல் காந்தி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு சுற்று வட்டாரம் மற்றும் சிறுமலை, ஊட்டி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நாள

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் 2–வது பெரிய மார்க்கெட்டாக திண்டுக்கல் காந்தி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு சுற்று வட்டாரம் மற்றும் சிறுமலை, ஊட்டி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நாள்தோறும் வரத்தினை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சை மிளகாய் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கிடு, கிடுவென விலை உயர்ந்து ஒரு கிலோ பச்சை மிளகாய் தற்போது ரூ.50–க்கு விற்பனை ஆகிறது. இதுகுறித்து காய்கறி வியாபாரி ஒருவர் கூறியதாவது:–

மார்கழி, தை மாதங்களில் பச்சை மிளகாய் வரத்து குறைவால் விலை அதிகரிப்பது வழக்கம். அதனால் தாராபுரம், உடுமலைப்பேட்டை, திருப்பூர் பகுதிகளில் இருந்து ‘புல்லட்‘ வகை பச்சை மிளகாய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மார்க்கெட்டில், தக்காளி கிலோ ரூ.8–க்கும், முட்டைக்கோஸ் ரூ.10, முள்ளங்கி, கொத்தவரங்காய் ரூ.15, சவ்சவ், பீட்ரூட் ரூ.20, கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கேரட் ரூ.25, வெண்டைக்காய் ரூ.30, அவரைக்காய் ரூ.30, இஞ்சி, பீன்ஸ், சேனைக்கிழங்கு ரூ.35, பச்சைமொச்சை ரூ.50, கத்தரிக்காய் ரூ.60–க்கும் விற்பனை ஆனது.


Next Story