7 வயது சிறுமியை தரையில் அடித்து கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை தலச்சேரி கோர்ட்டு தீர்ப்பு

கண்ணூர் மாவட்டம் தலச்சேரி திருவோஸ்கட்டூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா (வயது 40). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2010–ம் ஆண்டு குடும்ப தகராறில் தனது 7 வயது மகள் ஆயிஷாவை கால்கள் இரண்டையும் பிடித்து தலைகீழாக தூக்கி தரையில் அடித்துள்ளார். இதில், பலத்த காயம் அடை
கண்ணூர்,
கண்ணூர் மாவட்டம் தலச்சேரி திருவோஸ்கட்டூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா (வயது 40). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2010–ம் ஆண்டு குடும்ப தகராறில் தனது 7 வயது மகள் ஆயிஷாவை கால்கள் இரண்டையும் பிடித்து தலைகீழாக தூக்கி தரையில் அடித்துள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த ஆயிஷா அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி ஆயிஷா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்துல்லாவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு தலச்சேரி கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்த கோர்ட்டு, குற்றவாளியான அப்துல்லாவுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.
Next Story