மின் வாரியம் சார்பில் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் எழும்பூர் கோட்ட அலுவலகத்தில் இன்று நடக்கிறது

மின் வாரியம் சார்பில் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் எழும்பூர் கோட்ட அலுவலகத்தில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 5 Jan 2017 8:27 PM GMT (Updated: 2017-01-06T01:57:36+05:30)

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட கோட்ட அலுவலகங்களில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடப்பது வழக்கம்.

இந்தாண்டு ஜனவரி மாதத்துக்கான நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் சென்னை எழும்பூர் மலையப்பன் தெருவில் உள்ள கோட்ட அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு மத்திய சென்னை மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தின் மூலம் மின் தொடர்பான குறைகளை நுகர்வோர்கள் தெரிவித்து தீர்வு காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story