பேஸ்புக் தொடர்பில் மலர்ந்த கள்ளக்காதல் முறிவு: காதலியிடம் ரூ. 5 லட்சத்தை திருப்பி கேட்டு மிரட்டிய என்ஜினீயர் கைது


பேஸ்புக் தொடர்பில் மலர்ந்த கள்ளக்காதல் முறிவு: காதலியிடம் ரூ. 5 லட்சத்தை திருப்பி கேட்டு மிரட்டிய என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2017 8:33 PM GMT (Updated: 2017-01-06T02:03:40+05:30)

பேஸ்புக் தொடர்பில் ஏற்பட்ட கள்ளக்காதல் திடீரென முறிவடைந்ததால், காதலிக்கு ஆடம்பரமாக செலவிட்ட ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டு மிரட்டிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

பேஸ்புக் தொடர்பில் ஏற்பட்ட கள்ளக்காதல் திடீரென முறிவடைந்ததால், காதலிக்கு ஆடம்பரமாக செலவிட்ட ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டு மிரட்டிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

பேஸ்புக்கில் மலர்ந்த கள்ளக்காதல்

சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர் கீதா(வயது32). இவர் கணவரை விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் மூலம் முகப்பேரை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான கோகுல்நாத்(30), என்பவரின் நட்பு கிடைத்தது. இருவரும் பேஸ்புக்கில் நண்பராக பழகி வந்தனர். நாளடைவில் அவர்களது நட்பு கள்ளக்காதலாக மாறியது. காதலர்கள் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்தனர்.

பெங்களூருவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்துவந்த கோகுல்நாத், தனக்கு கிடைத்துவரும் வருமானத்தில் ஒரு பகுதியை கீதாவுக்காக ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளார்.

திடீர் முறிவு-பணம் கேட்டு மிரட்டல்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் அவர்களது கள்ளக்காதலில் திடீர் முறிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கீதா, கோகுல்நாத்திடம் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கோகுல்நாத் தான் செலவு செய்த பணம் ரூ.5 லட்சத்தை கேட்டு போனிலும், நேரிலும் சென்று கீதாவை மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்து போன கீதா இதுகுறித்து அரும்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

என்ஜினீயர் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல்நாத்தை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கீதாவை, கோகுல்நாத் மிரட்டியதும் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கோகுல்நாத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story