ஏ.டி.எம். மையங்களுக்கு மலர் வளையம் இளைஞர் காங்கிரசார் போராட்டம்


ஏ.டி.எம். மையங்களுக்கு மலர் வளையம் இளைஞர் காங்கிரசார் போராட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-06T02:11:24+05:30)

ஏ.டி.எம். மையங்களுக்கு மலர் வளையம் இளைஞர் காங்கிரசார் போராட்டம்

புதுச்சேரி,

ஏ.டி.எம். மையங்களுக்கு மலர்வளையம் வைத்து இளைஞர் காங்கிரசார் நூதன போராட்டம் நடத்தினார்கள்.

காங்கிரசார் போராட்டம்

இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பினை தொடர்ந்து ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளை பெற நாள்தோறும் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான ஏ.டி.எம்.கள் எப்போதும் மூடியே கிடக்கின்றன. இதைக்கண்டித்து புதுவையில் காங்கிரசார் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலர்வளையம்

இதன்படி இளைஞர் காங்கிரசார் நேற்று புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.டி.எம். மையம் முன்பு மலர் வளையம் வைத்து அவர்கள் நூதன போராட்டத்தை நடத்தினார்கள். இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதேபோல் இந்திராகாந்தி சிலையருகே உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். ஒன்றுக்கும் மலர்வளையம் வைத்து இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள்.

Next Story