துப்புரவு தொழிலாளர்கள் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் கைரேகை வருகை பதிவு முறையை மாற்றக்கோரி நடத்தினர்


துப்புரவு தொழிலாளர்கள் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் கைரேகை வருகை பதிவு முறையை மாற்றக்கோரி நடத்தினர்
x
தினத்தந்தி 5 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-06T02:12:11+05:30)

துப்புரவு தொழிலாளர்கள் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் கைரேகை வருகை பதிவு முறையை மாற்றக்கோரி நடத்தினர்

திருச்சி,

கைரேகை வருகை பதிவு முறையை மாற்றம் செய்யக்கோரி திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

முற்றுகை போராட்டம்

திருச்சி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலைக்கு வருவதை கைரேகை மூலம் பதிவு செய்யும் முறை சமீபத்தில் அமல் படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய முறையால் துப்புரவு தொழிலாளர்கள் பெரும் துயரத்துக்குள்ளாகி உள்ளனர். துப்புரவு தொழிலாளர்கள் வேலை செய்யும் இடமும், வார்டு அலுவலகமும் சில கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் முழுமையான வேலை செய்து விட்டு திரும்புவதற்குள் காலதாமதம் அதிகமாகி விடுகிறது. எனவே, இந்த முறையை மாற்றி வருகை பதிவேட்டில் கையெழுத்து வாங்கும் பழைய முறையையே பின்பற்றவேண்டும் என கோரி சி.ஐ.டி.யூ. துப்புரவு தொழிலாளர்கள் நேற்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

கோஷம்

துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் சந்திரபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், துப்புரவு தொழிலாளர் சம்பள முறைகேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், வருங்கால வைப்பு நிதி, ஈட்டிய விடுப்பு போன்றவற்றிற்கான பலனை பெறுவதற்கு லஞ்சம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி கோஷம் போட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story