பெரம்பலூர், அரியலூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர், அரியலூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-06T02:13:27+05:30)

பெரம்பலூர், அரியலூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அரிய லூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து பெரம்பலூர் புது பஸ்நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கி, ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் படும் துன்பங்கள் குறித்து பேசினார். மாநில துணை தலைவர் சுஜாதா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் போக்கை கண்டித்து காங் கிரஸ் நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர்.

மேலும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் சிறு வியாபாரிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றனர். எனவே பணத்தட்டுப்பாடு நீங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் தங்கவேல், பொது செயலாளர் அருண்பிரகாஷ், மாவட்ட துணைத்தலைவர்கள் சுந்தர்ராஜ், கிருஷ்ணன், வட்டார தலைவர்கள் செல்வம், அருணாசலம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அரியலூரில்...

இதேபோல் அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதில் அகில இந்திய ஊடக பிரிவு பொதுச் செயலாளர் ரமணி, சிவக்குமார், பழனிசாமி, ரவிச்சந்திரபோஸ், சந்திரசேகரன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story