இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: நாகை மாவட்டத்தில் 12 லட்சத்து 71 ஆயிரத்து 153 வாக்காளர்கள் கலெக்டர் பழனிசாமி தகவல்


இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: நாகை மாவட்டத்தில் 12 லட்சத்து 71 ஆயிரத்து 153 வாக்காளர்கள் கலெக்டர் பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-06T02:13:48+05:30)

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: நாகை மாவட்டத்தில் 12 லட்சத்து 71 ஆயிரத்து 153 வாக்காளர்கள் கலெக்டர் பழனிசாமி தகவல்

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் 12 லட்சத்து 71 ஆயிரத்து 153 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் பழனிசாமி தெரிவித்தார்.

இறுதி வாக்காளர் பட்டியல்

நாகை மாவட்டத்தில் 2017 ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் 2017-ன் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் முனியநாதன் முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பழனிசாமி தலைமை தாங்கி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்து கலெக்டர் பழனிசாமி கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் மொத்தம் 1,502 வாக்கு சாவடிகள் உள்ளன. நாகை மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 71 ஆயிரத்து 153 வாக்காளர்கள் உள்ளனர்.

நாகை மாவட்டத்தில் 11.9.2016 மற்றும் 25.9.2016 ஆகிய இரு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்களிடம் இருந்து 29 ஆயிரத்து 148 பெயர் சேர்கைக்கான விண்ணப்பங்களும், நீக்கலுக்காக 2 ஆயிரத்து 572 விண்ணப்பங்களும், திருத்தத்திற்காக 8 ஆயிரத்து 566 விண்ணப்பங்களும், முகவரி மாற்றத்திற்காக 3 ஆயிரத்து 195 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. இதில் 27 ஆயிரத்து 504 பெயர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களும், 2 ஆயிரத்து 289 நீக்கலுக்கான விண்ணப்பங்களும், 7 ஆயிரத்து 658் திருத்தத்திற்கான விண்ணப்பங்களும், 2 ஆயிரத்து 317 முகவரி மாற்றத்திற்கான விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

பெண் வாக்காளர்கள் அதிகம்

அதன்படி இந்த சிறப்பு சுருக்க திருத்தம் 2017-ல் 12 ஆயிரத்து 832 ஆண்கள், 14 ஆயிரத்து 669 பெண்கள், இதரர் 3 என மொத்தம் 27 ஆயிரத்து 504 வாக்காளர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 12 ஆயிரத்து 743 பேர் அதிகமாக உள்ளனர். மேலும், பொதுமக்கள் தங்களின் பெயர்சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கான உரிய படிவங்களை தொடர்புடைய அலுவலகங்களில் சமர்பித்தோ அல்லது www.el-e-ct-i-ons.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தோ பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் நடைபெற்றது.

Next Story