ஆரல்வாய்மொழி அருகே அமைந்துள்ள பொய்கை அணையில் விஜயகுமார் எம்.பி. ஆய்வு


ஆரல்வாய்மொழி அருகே அமைந்துள்ள பொய்கை அணையில் விஜயகுமார் எம்.பி. ஆய்வு
x
தினத்தந்தி 5 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-06T02:15:37+05:30)

ஆரல்வாய்மொழி அருகே அமைந்துள்ள பொய்கை அணையில் விஜயகுமார் எம்.பி. ஆய்வு

நாகர்கோவில்,

தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா, சட்டசபையில் 110–ன் விதியின்கீழ் ரூ.3½ கோடி செலவில் ஆரல்வாய்மொழி அருகே உள்ள பொய்கை அணைக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களான சுங்கான் ஓடை, இரப்பையாறு பகுதிகள் சீரமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இப்பணிகளை மேற்கொள்ள போக்குவரத்து வசதி சரிவர இல்லாததால் கழுதை மூலமும், தலைச்சுமை மூலமும் கட்டுமானத்துக்கு தேவையான மூலப்பொருட்கள் எடுத்து செல்லபட்டு பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை விஜயக்குமார் எம்.பி. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பொய்கை அணைக்கு செல்லும் இணைப்பு சாலை வெகுவிரைவில் சீரமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும், பொய்கை அணையின் கொள்ளளவான 42 அடி அளவுக்கு நீர் நிரப்பப்படும் என்றும் விஜயகுமார் எம்.பி. தெரிவித்தார். ஆய்வின்போது அரசு வக்கீல் ஞானசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நாகர்கோவில் கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, அகில இந்திய வானொலி நிலையம் ஆகியவற்றுக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மறைந்த ஜெயலலிதாவின் 30–வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவரது உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி. தலைமை தாங்கி, ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


Next Story