தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2017 10:30 PM GMT (Updated: 2017-01-06T02:15:48+05:30)

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,

மாதந்தோறும் 1–ந்தேதி வழங்கப்படும் ஓய்வூதியம் இந்த மாதத்தில் இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறியும், எனவே ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் ராணிதோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு உதவி தலைவர் தங்கப்பன் தலைமை தாங்கினார். பத்மநாபபிள்ளை, தங்கமணி, கணேசன், அய்யாத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். இவர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

Next Story