சேத்துப்பட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்து 4 பேர் படுகாயம்


சேத்துப்பட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்து 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Jan 2017 9:01 PM GMT (Updated: 2017-01-06T02:31:16+05:30)

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் பகுதியில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள குளிர்சாதன பெட்டியில் (பிரிட்ஜ்) பழுது

சென்னை,

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் பகுதியில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள குளிர்சாதன பெட்டியில் (பிரிட்ஜ்) பழுது ஏற்பட்டதால் அதனை சரி செய்வதற்காக ராஜேஷ் (வயது 19) என்ற மெக்கானிக் நேற்று மதியம் தேவாலயம் வந்துள்ளார்.

குளிர்சாதன பெட்டியை பழுது பார்த்துக்கொண்டிருந்த போது அதிலிருந்த ‘கம்ப்ரசர்’ திடீரென வெடித்தது. இதில் மெக்கானிக் ராஜேஷ் மற்றும் அங்கிருந்த பாதிரியார் ராஜாசிங் (42) மற்றும் சினுபேபி (31), கீர்த்திராஜ் (20) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீக்காய பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story