பள்ளத்தில் சிக்கிய லாரி


பள்ளத்தில் சிக்கிய லாரி
x
தினத்தந்தி 5 Jan 2017 9:27 PM GMT (Updated: 2017-01-06T02:56:57+05:30)

மேட்டுப்பாளையத்தில் இருந்து 210 கேழ்வரகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருவள்ளூர் வழியாக செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

திருவள்ளூர்,

மேட்டுப்பாளையத்தில் இருந்து 210 கேழ்வரகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருவள்ளூர் வழியாக செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திருவள்ளூர்- செங்குன்றம் சாலையான ஈக்காடு பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் சிக்கியது.

இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அந்த லாரியை பள்ளத்தில் இருந்து மீட்டனர். பின்னர் அந்த லாரி செங்குன்றம் நோக்கி புறப்பட்டது. 

Next Story