பொத்தேரியில் நடந்து சென்ற பெண்ணிடம் 2 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு


பொத்தேரியில் நடந்து சென்ற பெண்ணிடம் 2 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 5 Jan 2017 9:34 PM GMT (Updated: 2017-01-06T03:04:21+05:30)

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் மேகாபிரகாஷ் கச்சோலியா (23).

வண்டலூர்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் மேகாபிரகாஷ் கச்சோலியா (23). இவர் நேற்று முன்தினம் இரவு பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் படிக்கும் உறவு பெண்ணை சந்திக்க சென்றார். பின்னர் ஓட்டலில் சாப்பிடுவதற்கு பொத்தேரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் மேகாபிரகாஷ் கச்சோலியா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story