ஜேடர்பாளையம் அருகே பகவதிஅம்மன் கோவில் திருவிழா
பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள ஆனங்கூரில் பகவதி அம்மன் கோவில் உள்ளது.
பரமத்திவேலூர்,
இக்கோவில் திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முதல்நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.
அதனை தொடர்ந்து பகவதி அம்மனுக்கு பால், பன்னீர், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது. 2–ம் நாள் நிகழ்ச்சியாக திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
3–ம் நாள் நிகழ்ச்சியாக கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் போடும் நிகழ்ச்சி நடந்தது. 4–ம் நாளான நேற்று கிடா வெட்டும் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதிஉலா வரும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.