எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்: அ.தி.மு.க. தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவையொட்டி 3 நாட்கள் நடைபெறும்
விழுப்புரம்,
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
தமிழக முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் 100–வது பிறந்த நாள் விழாவை விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவரது பிறந்த நாளான வருகிற 17–ந்தேதி வடக்கு மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்தை திறந்து வைத்து கட்சி கொடி ஏற்றி ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவுப்படி விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்கள் மற்றும் 2 நகரங்களில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
பொதுக்கூட்டம்வருகிற 17–ந்தேதி விழுப்புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பு.தா.இளங்கோவனும், கண்டமங்கலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன், தலைமை கழக பேச்சாளர் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு பேச இருக்கிறார்கள். இதேபோல் மயிலம், வல்லம், கிளியனூர், மேல்மலையனூர் ஆகிய ஒன்றியங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது.
வருகிற 18–ந்தேதி அன்று மரக்காணத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன், தலைமை கழக பேச்சாளர் மாஸ்டர் முருகேசன் கலந்து கொண்டு பேசுகிறார்கள். மேலும் செஞ்சி, திண்டிவனம், விக்கிரவாண்டி, ஒலக்கூர் கிழக்கு, காணை ஆகிய ஒன்றியங்களிலும், வருகிற 19–ந்தேதி ஒலக்கூர் மேற்கு, கோலியனூர்,வானூர் ஆகிய ஒன்றியங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டங்களில் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் டாக்டர் லட்சுமணன் எம்.பி. கூறியுள்ளார்.