தனியார் தொழிற்சாலைகளில் பச்சை தேயிலைக்கு மாத விலையாக கிலோவுக்கு ரூ.18 நிர்ணயம்
தனியார் தொழிற்சாலைகளில் பச்சை தேயிலைக்கு மாத விலையாக கிலோவுக்கு ரூ.18 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான சிறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகள் தேயிலை தோட்டத்திலிருந்து பறிக்கும் பச்சை தேயிலையே தேயிலை து£ள் உற்பத்திக்கு மூலப்பொருளாக உள்ளது. தேயிலைத்தூள் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறு விவசாயிக்ள தங்கள் தோட்டங்களிலிருந்து பறிக்கும் பச்சை தேயிலையை தரமானதாக பறிக்க வேண்டும் என்று தேயிலை வாரியமும் உபாசி வேளாண்மை அறிவியல் மையமும் அறிவுறுத்தி வருகின்றன.
உலக சந்தையில் தேயிலைக்கு ஏற்படும் விற்பனை போட்டி காரணமாக தரமான பச்சை தேயிலை மூலம் உயர்தர பச்சை தேயிலையை தயாரிக்க தேயிலை தொழிற்சாலைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள சிறு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் இருந்து பறிக்கும் பச்சை தேயிலையை வாங்கும் தேயிலை தொழிற்சாலை என்று அழைக்கப்படும், தனியார் சிறு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகிறார்கள். இவ்வாறு வழங்கப்படும் பச்சை தேயிலைக்கு வார விலை என்றும், மாத விலை என்றும் வழங்கப்படுகிறது.
மாத விலை நிர்ணயம்வார விலை கோத்தகிரி தாலுகாவில் உள்ள தொழிற்சாலைகளிலும், குன்னூர் தாலுகாவில் உள்ள ஒரு சில தொழிற்சாலைகளிலும் வழங்கப்படுகிறது. மாத விலை கரும்பாலம், சேலாஸ் போன்ற பகுதிகளிலும், குந்தா தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளிலும் வழங்கப்படுகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் விவசாயிகள் வழங்கிய பச்சை தேயிலைக்கு தற்போது தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் மாத விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.18 என்று மாத விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விலை கடந்த டிசம்பர் மாதம் நிர்ணயம் செய்த விலையை விட ரூ.2 கூடுதலாகும்.