தேனி அல்லிநகரத்தில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது தந்தைக்கு வலைவீச்சு


தேனி அல்லிநகரத்தில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது தந்தைக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Jan 2017 4:15 AM IST (Updated: 12 Jan 2017 11:27 PM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லிநகரம் மண்டுகருப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 65). தொழிலாளி.

அல்லிநகரம்,

தேனி அல்லிநகரம் மண்டுகருப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 65). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மொட்டையன் தெருவில் குடிபோதையில் தகாத வார்த்தையால் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த மோகன் (55), அவருடைய மகன் லோகநாதன் (27) ஆகியோர் தட்டி கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர்கள் கட்டையால் கோவிந்தராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் கோவிந்தராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மோகனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story