பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்வு
கரூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்ந்தது. கரும்பு விற்பனை அமோகமாக நடைபெற்றது.
கரூர்,
பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை தினத்தன்று காலையில் பெண்கள் வீட்டில் பொங்கல் வைத்து, பழம், கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவை வைத்து சாமி கும்பிட்டு பொங்கலை கொண்டாடுவார்கள். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது கரூருக்கு ஏராளமான விவசாயிகள் தங்கள் வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வருவார்கள்.
அதன்படி நேற்று கரூர் காமராஜர் மார்க்கெட் அருகே உள்ள வாழைத்தார் ஏலம் விடும் இடத்திற்கு ஆயிரக்கணக்கான வாழைத்தார்கள் ஏலத்திற்கு வந்து இருந்தன. அதே போன்று ஏலம் எடுப்பதற்கு ஏராளமான வியாபாரிகளும் வந்து இருந்தனர். நேற்று அதிக அளவு பூவன் வாழைத்தார்கள் தான் ஏலத்திற்கு வந்து இருந்தன. ஏன் என்றால் பூவன் வாழைப்பழத்தை வைத்து தான் சாமி கும்பிடுவார்கள். ஒரு பூவன் வாழைத்தார் ரூ.1,500 வரை ஏலம் போனது. இதனால் வாழைத்தார் விற்பனைக்கு கொண்டு வந்து இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கரும்பு
அதேபோன்று கரும்பு அதிக அளவு விற்பனைக்கு வந்துள்ளன. கரூர் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கரும்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு கரும்பு ரூ.50-க்கு விற்கப்படுகிறது. 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது. 15 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.500 முதல் ரூ.550 வரை விற்கப்படுகிறது. இது குறித்து கரும்பு விற்பனை செய்பவர்கள் கூறும்போது, திண்டுக்கல் அருகே இருந்து கரும்பு விலைக்கு வாங்கி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம்.
தோட்டத்தில் இருக்கும் ஒரு கரும்பு ரூ.18-க்கு வாங்குகிறோம். பின்னர் அதை வெட்டி, கட்டி லாரியில் ஏற்றி விற்பனை செய்யும் இடத்திற்கு கொண்டு வருவதற்கு ஒரு கரும்புக்கு ரூ.30 வரை செலவு ஆகிறது. இதனால் ஒரு கரும்பு ரூ.50-க்கு விற்கிறோம். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் ஆழ்குழாய் மூலம் பயன்படுத்தி ஓரளவுக்கு கரும்பு விவசாயம் செய்துள்ளார்கள். தண்ணீர் பற்றாக்குறையினால் கரும்பு நல்ல முறையில் விளைச்சல் இல்லை என்று கூறினர்.
போகி பண்டிகை
இன்று (வெள்ளிக்கிழமை) போகிப்பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. போகி பண்டிகை அன்று ஒவ்வொரு வீட்டிலும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கும். அதன்படி பூலப்பூ, வேப்பிலை, ஆவாரம்பூ ஆகியவற்றை வீட்டின் ஒவ்வொரு மூளையிலும் கட்டி வைப்பார்கள். அதன்படி பூலப்பூ, வேப்பிலை, ஆவாரம் பூ ஆகியவையும் நேற்று மாலையில் இருந்து கரூர் நகரில் விற்பனையானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை மிகவும் உயர்ந்தது.

Next Story