குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் விலையில்லா வேட்டி-சேலையை வழங்கினார்.
கரூர்,
வேட்டி-சேலை வழங்கும் விழா
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் வெங்கமேட்டில் குடும்ப அட்டைதாரர் களுக்கு விலையில்லா வேட்டி- சேலை மற்றும் பொங்கல் பரிசு வழங்கும் விழா நேற்று மதியம் நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி-சேலை, பொங்கல் பரிசு பொருட்கள் ஆகியவற்றை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
பல்வேறு திட்டங்கள்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் சொன்ன அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றினார். அதன்படி ரூ.158½ கோடி விவசாய கடனை ஜெயலலிதா தள்ளுபடி செய்தார். தமிழ்நாட்டில் பசி இல்லை என்ற நிலையை உருவாக்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அதேபோன்று விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கியவர் ஜெயலலிதா என்பதை நன்றியோடு எண்ணி பார்க்க வேண்டும். மேலும் கூட்டுறவு துறை மூலம் ஏழை, எளியவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் வழங்கியவர் ஜெயலலிதா.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story