விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பட்டை நாமம் போட்டும், கையில் பானையை ஏந்திக்கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னமராவதி,
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், அனைத்து குடும்பங்களுக்கும் 6 மாதத்திற்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பக்ருதீன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story