பெரம்பலூரில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சாலை பணியாளர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில் பெரம்பலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்,
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்து தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராஜா, இணை செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் சாலை பணியாளர்களுக்கு பொங்கலுக்கு முன்பாக போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், மாநில செயலாளர் மகேந்திரன் உள்பட சாலை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Next Story