பயிர் கருகியதால் மாரடைப்பால் விவசாயி சாவு


பயிர் கருகியதால் மாரடைப்பால் விவசாயி சாவு
x
தினத்தந்தி 13 Jan 2017 4:15 AM IST (Updated: 13 Jan 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

சோமரசம்பேட்டை அருகே பயிர் கருகியதால் சோகத்துடன் இருந்த விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

சோமரசம்பேட்டை,

விவசாயி

திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அருகில் உள்ள மருதாண்டாகுறிச்சி ஊராட்சியை சேர்ந்த ஏகிரிமங்கலம் குடித்தெருவை சேர்ந்தவர் துரை(வயது 65). விவசாயி. இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு 6 மகள்கள் மற்றும் சிவா என்ற மகன் ஆகியோர் உள்ளனர். இதில் 4 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ராணி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார்.

துரை தனக்கு சொந்தமான நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தார். கடன் பெற்று சாகுபடி செய்திருந்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல் வாடி கருகின. இதனால் துரை கவலையுடன் இருந்துள்ளார்.

சாவு

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துரை சாப்பிட்டுவிட்டு, வீட்டில் சோகத்துடன் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மாரடைப்பால் அவர் இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story