ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நூதன போராட்டம்


ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2017 4:30 AM IST (Updated: 13 Jan 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இலைகளை கையில் ஏந்தி நூதன முறையில் போராட்டத்தில் பங்கேற்றனர்.

நாகர்கோவில்,

தர்ணா போராட்டம்

மாதந்தோறும் 1–ந் தேதி வழங்கப்படும் ஓய்வூதியத்தொகையை, 12–ந் தேதி ஆன பின்னரும் வழங்காததை கண்டித்தும், சுமார் 66 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தொகை வழங்கப்படாததை கண்டித்தும், 1–1–2016 முதல் 6 சதவீத பஞ்சப்படியும், 1–7–2016 முதல் 7 சதவீத பஞ்சப்படி உயர்வு வழங்கவும், நிலுவையில் உள்ள ஓய்வுகால பணபலன்கள் அனைத்தையும் வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல தலைமை அலுவலகம் முன்பு “பென்சன் போடு” இல்லையேல் சோறு போடு“ என்ற கோ‌ஷத்துடன் தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு கூட்டமைப்பு நிர்வாகி கணேசன் தலைமை தாங்கினார். பத்மநாபன், சைமன், தங்கமணி, ஆன்றனி, வில்லியம் போஸ்கோ உள்பட பலர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் கூட்டமைப்பு செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அய்யாத்துரை சிறப்புரையாற்றினார்.

கைகளில் இலைகளை ஏந்தி...

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் “பென்சன் போடு இல்லையேல் சோறு போடு” என்ற கோரிக்கைக்கு ஏற்ப நூதன முறையில் பிளாஸ்டிக் இலைகளை கையில் ஏந்தி தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் நேற்று காலையில் இருந்து மாலை வரை தொடர்ந்து நடந்தது.

இதற்கிடையே நேற்று மதியம் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஓய்வூதியத்தொகையில் 50 சதவீதம் வழங்க உத்தரவிட்டிருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தகவல் வந்தது.


Next Story