தாம்பரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் சாலை மறியல்
சென்னையை அடுத்த தாம்பரத்தில் கிறிஸ்துவ கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி நேற்று மாலை கல்லூரி அருகே வேளச்சேரி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
தாம்பரம்,
சிறிது நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் வேளச்சேரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.
இதேபோல நேற்று காலை ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி இளைஞர்கள் பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வரை மோட்டார்சைக்கிள் பேரணி நடத்தினர்.
இதேபோல் தாம்பரத்தில் பொங்கல் தினவிழா கோலப்போட்டி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை வலியுறுத்தும் விதமாக கோலம் போட்டனர்.
தரமணியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பணியாற்றும் 100–க்கும் மேற்பட்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தரமணி போலீசார் விரைந்து சென்று பேசினார்கள். பின்னர் அவர்கள் சாலை மறியல் செய்யாமல் ஓரமாக நின்று கோஷங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.