மருத்துவ கல்லூரி மாணவரை மிரட்டி சொகுசு கார் பறிப்பு 3 பேர் கைது
வளசரவாக்கத்தில் துருக்கி நாட்டு மருத்துவ கல்லூரி மாணவரை கத்தியை காட்டி மிரட்டி சொகுசு காரை பறித்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். துருக்கி நாட்டு மாணவர் துருக்கி நாட்டை சேர்ந்தவர் எம்ரே (வயது 26). இவர், பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தில் உள்ள அ
பூந்தமல்லி,
வளசரவாக்கத்தில் துருக்கி நாட்டு மருத்துவ கல்லூரி மாணவரை கத்தியை காட்டி மிரட்டி சொகுசு காரை பறித்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
துருக்கி நாட்டு மாணவர்துருக்கி நாட்டை சேர்ந்தவர் எம்ரே (வயது 26). இவர், பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, தனியார் கல்லூரியில் மனோதத்துவ நிபுணருக்கான மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.
இவர் தன்னிடம் உள்ள சொகுசு காரை விற்று விட்டு வேறு கார் வாங்க முடிவு செய்தார். இதற்காக அந்த சொகுசு காரை விற்க உள்ளதாக ஆன்–லைனில் விளம்பரம் செய்து இருந்தார்.
அதை பார்த்த சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த பஷீர் என்பவர், அந்த காரை வாங்கிக்கொள்வதாக கூறி எம்ரேவை காருடன் வரும்படி அழைத்தார்.
சொகுசு கார் பறிப்புஅதை நம்பி எம்ரே, தனது காருடன் கடந்த மாதம் பஷீரை பார்க்கச் சென்றார். வளசரவாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் இருவரும் காரின் விலை குறித்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பஷீர், தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவர் எம்ரேவை கத்தியை காட்டி மிரட்டினார்.
பின்னர் எம்ரேவிடம் இருந்து சொகுசு கார் மற்றும் துருக்கி நாட்டு பணத்தை பறித்துக்கொண்ட அவர்கள், இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டனர்.
3 பேர் கைதுஇதுபற்றி எம்ரே, துருக்கி தூதரகத்தில் புகார் செய்தார். அவர்கள் சென்னை வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வளசரவாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. பிரமுகர் பஷீர் (44) மற்றும் அவரது நண்பர்களான சவுத்ரி (45), பாபு(30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள், வாணியம்பாடியை சேர்ந்த ஒருவரையும் இதே போல் மிரட்டி காரை பறித்தது தெரிந்தது. கைதானவர்களிடம் இருந்து 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.