போலீசாருக்கு 8 மணி நேர வேலை திட்டம் மாநிலம் முழுவதும் அமல்படுத்த சாத்தியமில்லை போலீஸ் டி.ஜி.பி. சதீஷ் மாத்தூர் பதில்


போலீசாருக்கு 8 மணி நேர வேலை திட்டம் மாநிலம் முழுவதும் அமல்படுத்த சாத்தியமில்லை போலீஸ் டி.ஜி.பி. சதீஷ் மாத்தூர் பதில்
x
தினத்தந்தி 13 Jan 2017 4:40 AM IST (Updated: 13 Jan 2017 4:40 AM IST)
t-max-icont-min-icon

போலீசாருக்கு 8 மணி நேர வேலை திட்டத்தை அமல்படுத்த சாத்தியமில்லை என போலீஸ் டி.ஜி.பி. சதீஷ் மாத்தூர் கூறியுள்ளார்.

மும்பை,

8 மணி நேர வேலை திட்டம்

மும்பையில் கடந்த ஆண்டு முதல் போலீசாருக்கு 8 மணி நேர வேலை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது மும்பையில் உள்ள சுமார் 40 போலீஸ் நிலையத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவுரங்காபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மராட்டிய போலீஸ் டி.ஜி.பி. சதீஷ் மாத்தூர் கலந்துகொண்டார்.

அப்போது நிருபர்கள் அவரிடம், மும்பையில் உள்ளது போல போலீசாருக்கான 8 மணி நேர வேலை திட்டம் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுமா? என கேட்டனர்.

1.10 லட்சம் போலீசார் தேவை

அதற்கு பதிலளித்து போலீஸ் டி.ஜி.பி. சதீஷ் மாத்தூர் கூறியதாவது:–

தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 10 ஆயிரம் போலீசார் பணியாற்றி வருகின்றனர். மாநிலம் முழுவதும் போலீசாருக்கு 8 மணி நேர வேலை திட்டத்தை அறிமுகம் செய்யவேண்டும் என்றால் கூடுதலாக 1 லட்சத்து 10 ஆயிரம் போலீசார் தேவைப்படுவார்கள். அதாவது தற்போது பணியாற்றும் போலீசாரில் 50 சதவீதம் கூடுதலாக தேவை.

தற்போது நிலவி வரும் ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினையில் மாநிலம் முழுவதும் 8 மணி நேர வேலை திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story