மாநகராட்சி தேர்தல்: சிவசேனாவுடன் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை
மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவுடன் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கிறது என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்
தானே,
பா.ஜனதா செயற்குழு கூட்டம்
மும்பை, தானே, புனே உள்ளிட்ட 10 மாநகராட்சிகளுக்கு பிப்ரவரி 21-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 23-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது. இதையொட்டி, அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. கட்சிகளுக்கு இடையே ஆன கூட்டணி இன்னமும் அதிகாரப்பூர்வமாக முடிவாகவில்லை.
இந்த நிலையில் நேற்று தானேயில் பாரதீய ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மந்திரிகள் சுதீர் முங்கண்டிவார், வினோத் தாவ்டே, மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் வி.சதீஷ், ராகேஷ் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு
நிகழ்ச்சியில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில் கூறியதாவது:-
மும்பை மாநகராட்சி தேர்தலையொட்டி சிவசேனாவுடன் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை சரியான பாதையில் பயணிக்கிறது. அத்துடன் நின்றுவிடாமல், பொதுநலனில் வெளிப்படைத்தன்மையையும், துல்லியமான திட்டத்தையும் மையமாக கொண்டு பேச்சுவார்த்தை நகர்கிறது.
தொண்டர்களாகிய நீங்கள் சத்ரபதி சிவாஜியின் படைவீரர்களை போன்றவர்கள். எதிரியை பற்றி பயம் உங்களுக்கு கிடையாது. ஆனாலும், எதிரியை பந்தாட தெரிந்தவர்கள். அதன்படி, நமது எதிரி யார் என்பதை சரியான தருணத்தில் அறிந்து கொள்வீர்கள்.
உழைப்பவர்களுக்கே ‘சீட்’
பா.ஜனதா மக்கள் நலத்திட்டங்களுக்கு மட்டுமே கூட்டணியாக இணைந்து செயல்படும். கட்சிக்காக உழைப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் ‘சீட்’ வழங்கப்படும். தலைவர்களின் பின்னால் சுற்று பவர்களுக்கு சீட் வழங்கப்பட மாட்டாது. காங்கிரஸ் இல்லாத நாட்டையும், மாநிலத்தையும் உருவாக்குவதே பிரதமர் மோடியின் கனவு. இதனை கவனத்தில் கொண்டு செயல்படுவோம்.
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
அக்னி பரீட்சை
மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே கூறுகையில், “பிப்ரவரியில் நடைபெற உள்ள மும்பை மாநகராட்சி தேர்தலும், மாவட்ட பஞ்சாயத்து தேர்தலும் பா.ஜனதாவுக்கு அக்னி பரீட்சை. ஆகையால், வெற்றியை நோக்கி தொண்டர்கள் பாடுபட வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் காட்டிய அதே செயல்பாட்டை இதிலும் காட்டுங்கள்” என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், பா.ஜனதாவின் செயல்பாட்டால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறிய அவர், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றது அதற்கு சிறந்த உதாரணம் என்றும் குறிப்பிட்டார்.
பேனர்களால் பரபரப்பு
தானே மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவுடன் பா.ஜனதா கூட்டணி வைக்க வேண்டாம் என பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story