கூடுவாஞ்சேரி அருகே கார் மோதி முதியவர் சாவு
கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் சிவானந்தம் நேற்று முன்தினம் தனது சைக்கிளில் மாடம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 65). இவர் நேற்று முன்தினம் தனது சைக்கிளில் கூடுவாஞ்சேரியில் இருந்து மாடம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மாடம்பாக்கம் மேம்பாலம் அருகே சென்றபோது சிவானந்தம் மீது கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவானந்தம் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story