திருவள்ளூர் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு டன்லப் நகரைச் சேர்ந்தவர் கமலா (வயது 65). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலா வீட்டை பூட்டி விட்டு வெளிநாடு சென்றுவிட்டார்.
திருவள்ளூர்
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு டன்லப் நகரைச் சேர்ந்தவர் கமலா (வயது 65). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலா வீட்டை பூட்டி விட்டு வெளிநாடு சென்றுவிட்டார்.
நேற்று முன்தினம் இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் அங்கிருந்த ½ கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி. டி.வி மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர்.
இதேபோல வேப்பம்பட்டு கணேஷ் நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சரவணன் (40) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் 5 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். 2 சம்பவங்கள் குறித்தும் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story