மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட மதுரை வக்கீலை நேரில் ஆஜர்படுத்தக்கோரி மனைவி வழக்கு
மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு திருச்சி தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வக்கீலை நேரில் ஆஜர்படுத்தக் கோரி வழக்கு.
மதுரை,
மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு திருச்சி தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வக்கீலை நேரில் ஆஜர்படுத்தக் கோரிய வழக்கில், ஜெயில் சூப்பிரண்டு பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆட்கொணர்வு மனு
மதுரை எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்தவர் அழகுதேவி. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் முருகன் சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வக்கீலாக பயிற்சி பெற்று வந்தார். மனித உரிமை மீறல், காவல் நிலைய துன்புறுத்தல் போன்ற வழக்குகளில் பாதிக் கப்பட்டவர்கள் சார்பாக ஆஜராகி வாதாடி உள்ளார். இந்தநிலையில் பெரியகுளம் கோர்ட்டில் நடைபெற்று வரும் மாவோயிஸ்டுகள் தொடர்பான ஒரு வழக்கில் ஆஜராகி வந்தார். அந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த 8-ந்தேதி கியூ பிரிவு போலீசார் அத்துமீறி எங்கள் வீட்டிற்குள் நுழைந்து, மாவோயிஸ்டு களுக்கு உதவியதாக கூறி எனது கணவரை கைது செய்த னர். மேலும் அந்த வழக்கு தொடர்பான ஆவணங் களையும் எடுத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து எனது கணவரை கரூர் நீதிமன்றத்தில் 10-ந்தேதி ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள் ளனர். அவரை நான் காண சென்றபோது, தனிமைச் சிறையில் அவரை அடைத் துள்ளதாக தெரிவித்தனர்.
எனவே அவரை மீட்டு நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். மேலும் தனிமைச் சிறையிலிருந்தும், இந்த வழக்கி லிருந்தும் விடுவித்து, உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பதிலளிக்க உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஜே.நிஷாபானு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், திருச்சி ஜெயில் சூப்பிரண்டு பதில்மனுத் தாக்கல் செய்யவும், வழக்கின் தொடர் விசா ரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தர விட்டார்.

Next Story