பாளையங்கோட்டையில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி
பாளையங்கோட்டை நேருஜி சிறுவர் கலையரங்கில் கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் சார்பில், மாநில அளவிலான கைவினைப் பொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மண்பானைகள், கதர் பொருட்கள், தேன், பத்தி, மெத்தை உள்ளிட்ட ஏராளமான கைவினைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
நெல்லை,
பாளையங்கோட்டையில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி தொடங்கப்பட்டது.
கைவினைப் பொருட்கள் கண்காட்சி
பாளையங்கோட்டை நேருஜி சிறுவர் கலையரங்கில் கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் சார்பில், மாநில அளவிலான கைவினைப் பொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மண்பானைகள், கதர் பொருட்கள், தேன், பத்தி, மெத்தை உள்ளிட்ட ஏராளமான கைவினைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. முன்னிலை வகித்தார். கலெக்டர் கருணாகரன் கண்காட்சியியை தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, மண்பாண்ட கைவினைப் பொருட்கள் மற்றும் சர்வோதய சங்கங்களின் கைவினைப் பொருட்களின் அரங்குகளை பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த கண்காட்சி வருகிற 26–ந்தேதி வரை 15 நாட்கள் நடைபெறுகிறது. பல்வேறு விதமான கதர் ரகங்களும், ரசாயன கலப்பு இல்லாத தேன் மற்றும் பல்வேறு பொருட்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில், கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மூலம் 281 திட்டங்களுக்கு ரூ.2 கோடியே 37 லட்சத்து 61 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. ரூ.26 கோடி மதிப்பிலான கதர் கிராமத் தொழில் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கண்காட்சி வாயிலாக ரூ.75 லட்சம் மதிப்பிலான கைவினைப் பொருட்கள் விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
விழாவில், தென்னக ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாப்புலர் முத்தையா, தென்பிராந்திய கதர்கிராம தொழில்கள் ஆணைய உறுப்பினர் சந்திரமவுலி, மண்டல இயக்குநர் நல்லமுத்து, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஞானசேகரன், கதர் கிராம தொழில்கள் வாரிய உதவி இயக்குனர் அருணாச்சாலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story