தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள்
தூத்துக்குடி ராஜலட்சுமி கல்விக் குழுமங்களின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரியில் நடந்தது. விழாவுக்கு ராஜலட்சுமி கல்விக் குழுமங்களின் தலைவர் ஆறுமுகநயினார் தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பொங்கல் விழா
தூத்துக்குடி ராஜலட்சுமி கல்விக் குழுமங்களின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரியில் நடந்தது. விழாவுக்கு ராஜலட்சுமி கல்விக் குழுமங்களின் தலைவர் ஆறுமுகநயினார் தலைமை தாங்கினார். அறிஞர் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் விஜயலட்சுமி வரவேற்று பேசினார். தாளாளர் ராஜலட்சுமி ஆறுமுக நயினார் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். செயலாளர் ஆறுமுககிருஷ்ணகுமார், கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜான்சன் வீராசிங் ஆகியோர் பேசினர். விழாவில் ராஜலட்சுமி கல்வி குழுமங்களின் செயற்குழு உறுப்பினர்கள் சுமதி ஆறுமுககிருஷ்ணகுமார், டாக்டர் ஜெயலலிதா, டாக்டர் சுகன்யா ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
விழாவையொட்டி மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபட்டனர். தமிழர்களின் பண்பாட்டை சிறப்பிக்கும் விதமாக கலைநிகழ்ச்சிகள், கவிதை வாசிப்பு, நாடகங்களை மாணவிகள் நடத்தினர்.
முடிவில் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அரிநாதன் நன்றி கூறினார்.
சக்தி வித்யாலயா பள்ளி
தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவை பள்ளி நிறுவனர் சண்முகம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். கோலப் போட்டியும், ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் ஜெயா சண்முகம் பரிசு வழங்கினார்.
விழாவில் தூத்துக்குடி மாவட்ட சேவாபாரதி மாவட்ட இணைச் செயலாளர் கிருஷ்ணவேனி, மாணவ–மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் ரூபி ரத்னபாக்கியம் செய்து இருந்தார்.
சாண்டி கல்லூரி
தூத்துக்குடி சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் மற்றும் கல்லூரி விளையாட்டு போட்டி நடந்தது. விழாவுக்கு கல்லூரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். உதவித்தலைவர் எஸ்.பி.சாண்டி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுப்பாராஜ் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கும், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
விழாவில் கல்லூரி ஆலோசகர் வீரமுத்துமோனி, செயலாளர் ராஜரத்தினம், நிர்வாக அலுவலர் கணேசன், மாணவ–மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பியர்ல் சிட்டி ஜே.சி.ஐ. அமைப்பு சார்பில் சாயர்புரத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைவர் வளன் தங்கராஜ் தலைமை தாங்கினார். விழாவையொட்டி சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏழை பெண்ணுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டது. விழாவில் செயலாளர் பாலமுரளி கிருஷ்ணா, திட்டத்தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story