ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் தர்மபுரியில் நடந்தது
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தர்மபுரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தர்மபுரி
ஆர்ப்பாட்டம்தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பி.என்.பி. இன்பசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் மாதையன், மாவட்ட துணை செயலாளர்கள் சூடப்பட்டி சுப்பிரமணி, முனிராஜ், லட்சுமி, நாட்டான்மாது, மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டை நடத்த தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோஷங்கள்ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க தவறியதாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி தொலைபேசி நிலையம் அருகே ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி, மாநில தீர்மானக்குழு உறுப்பினர் விசுவநாதன், நகர செயலாளர் தங்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோகரன், வேடம்மாள், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சித்தார்த்தன், சண்முகம், தேசிங்குராஜன், செங்கண்ணன், குமரவேல், குட்டி, சார்பு அமைப்பு மாவட்ட அமைப்பாளர்கள், முன்னாள் நகர செயலாளர் சிட்டி முருகேசன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.