கும்பகோணம் அருகே வாய்க்காலில் அரசு பஸ் கவிழ்ந்தது; டிரைவர் உள்பட 6 பேர் காயம்


கும்பகோணம் அருகே வாய்க்காலில் அரசு பஸ் கவிழ்ந்தது; டிரைவர் உள்பட 6 பேர் காயம்
x
தினத்தந்தி 14 Jan 2017 5:00 AM IST (Updated: 13 Jan 2017 10:55 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே வாய்க்காலில் அரசு பஸ் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

கும்பகோணம்,

வாய்க்காலில் கவிழ்ந்தது

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து சென்னையில் இருந்து தஞ்சை, கும்பகோணத்திற்கு ஏராளமான விரைவு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டன. அதன்படி சென்னையிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு அரசு விரைவு பஸ் 22 பயணிகளுடன் தஞ்சையை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை ராமகிருஷ்ணன் ஓட்டினார். அந்த பஸ் கும்பகோணத்தை அடுத்த சென்னை பைபாஸ் சாலை கொண்டாங்குடி அருகே நேற்று அதிகாலை வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஒரத்தில் உள்ள வாய்க்காலுக்குள் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கும்பகோணத்தை அடுத்த தேவானாஞ்சோ மெயின் ரோட்டை சோந்த பஸ் டிரைவர் ராமகிருஷ்ணன்(வயது40), திருச்சி வாஞ்சிநாதன் தெருவை சோந்த கண்டக்டர் மதியழகன்(32), தஞ்சை வண்ணாரப்பேட்டை, அம்பேத்கா நகரை சோந்த காணன் மகள் கவுதமி(23) மற்றும் பஸ்சில் பயணம் செய்த ராணி, லடசுமணன், ரஞ்சித்குமா£ உள்பட 6 போ காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை உடனே கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசா£ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா.


Next Story