நீலகிரி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு


நீலகிரி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு
x
தினத்தந்தி 14 Jan 2017 3:15 AM IST (Updated: 13 Jan 2017 11:19 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மதுபான விதிகள் படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுபான சில்லறை விற்பனை கடைகள், ஓட்டல் பார்கள் ஆகியவற்றில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யக்கூடாது.

ஊட்டி

தமிழ்நாடு மதுபான விதிகள் படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுபான சில்லறை விற்பனை கடைகள், ஓட்டல் பார்கள் ஆகியவற்றில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யக்கூடாது. அன்றைய தினத்தில் கட்டாயமாக டாஸ்மாக் கடைகள், பார்கள் என அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் சங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story